• Jul 26 2025

சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாக்கே டப் கொடுப்பாங்க போல...அழகு தேவதையாக மாறிய ரோஜா பட நடிகை மதுபாலா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஏப். 14ம் தேதி படம் வெளியாகிறது.

சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர். மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா – துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகை மதுபாலாவின் அழகிய தோற்றத்துடன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இதில் நடிகை மதுபாலாவின் தோற்றம், காட்சி அமைப்பு, கிறாபிக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.எனவே இதனால் ரசிகர்கள் மத்தியில்கூடுதலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதனை பார்த்தவர்கள் ரொம்ப அழகா இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement