• Jul 26 2025

அவங்களை பற்றி பேசினால் மட்டும் போதாது- கொள்கைகளையும் கடைப்பிடிக்கனும்- விஜய்க்கு அட்வைஸ்ட் பண்ணிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார். இப்படத்திலிருந்து அண்மையில் நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்தப் பாடலில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டபதிவில், “நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. இந்தக்  காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


 இந்த நிலையில் நஇன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “2026-ல் பாமக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் 2024 மக்களவைத் தேர்தலை நாங்கள் அணுக உள்ளோம்.

முதல்வரும் ஆளுநரும் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்கள். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்ப ஆளுநர் கேட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் இதில் அரசியல் செய்யக்கூடாது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசும் கர்நாடக அரசும் அமர்ந்து பேசி உரிய தீர்வை காண வேண்டும். இந்த பிரச்சினை இப்படியே தொடர்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் அனுமதிக்கக்கூடாது.


இது தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். நடிகர் விஜய் தலைவர்களைப் பற்றி பேசினால் போதாது. அவர்களுடைய கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரைப் பற்றியோ, அம்பேத்கரை பற்றியோ, கர்மவீரர் காமராசரை பற்றியோ பேசினால் மட்டும் போதாது அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement