• Jul 26 2025

அரை குறை ஆடை போட்டால் என்னை மட்டும் விடமாட்டாங்க இது நியாயமே இல்லை- கங்கனா ரனாவத் காட்டம்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ட்விட்களை போட்டு கலவரங்களை உண்டு பண்ணி வருகிறார் என இதற்கு முன் இருந்த டுவிட்டர் நிர்வாகம் அவரது டுவிட்டர் கணக்கையே முடக்கி நடவடிக்கை எடுத்தது.

ஆனால், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், காசு கொடுத்தால் யார் வேண்டுமானால் ப்ளூ டிக் வாங்கிக் கொண்டு சேரலாம் என்கிற நடைமுறையை அமல்படுத்திய நிலையில், மீண்டும் டுவிட்டரில் தனது கருத்துக்களையும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்.


பாரம்பரிய மிக்க இந்து கோயிலுக்குள் சில பெண்கள் மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நிகி உனியால் எனும் நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்தியில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அதனை ரீட்வீட் அடித்த நடிகை கங்கனா ரனாவத் இன்டைக்கு கன்டென்ட் கிடைத்து விட்டது என அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குள் எப்படி பெண்கள் வரலாம் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், தான் ஒரு முறை வாடிகன் சர்ச்சுக்கு சென்ற போது ஷார்ட்ஸ் அணிந்து சென்று விட்டேன். அங்கே என்னை அவர்கள் உள்ளே விடவே இல்லை என்றும் அது போன்ற நடவடிக்கைகள் இங்கேயும் வரவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். கோயில்களில் மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு இப்படி அரைகுறையாக வரக்கூடாது என்கிற பொது அறிவு கூட இல்லாத அறிவு கெட்ட முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிகளை கோயில் நிர்வாகங்கள் கொண்டு வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கொதித்தெழுந்துள்ளார்.


சினிமாவில் படு செக்ஸியாக ஆடைகளை அணிந்து கொண்டு பல இளம் பெண்களை நீங்கள் கெடுத்த வேலை தான் இப்படி பொதுவெளியில் இளம் பெண்கள் அரை குறை ஆடைகளுடன் அலைகின்றனர் என்று ரசிகர்கள் கங்கனா ரனாவத்தை விளாசி வருகின்றனர். மேலும், யார் எந்த ஆடையை அணிய வேண்டும் என்கிற உடை கட்டுப்பாட்டை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் என்றும் உங்கள் ஆடை குறித்து யாராவது சொன்னால் அதை நீங்கள் கேட்பீர்களா? என்றும் விளாசி வருகின்றனர்.

 நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தியில் எமர்ஜென்ஸி என்னும் டைட்டிலில் இந்திராகாந்தியாக நடித்தும் இயக்கியும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement