• Jul 24 2025

இது உருட்டு இல்லை உண்மை- லியோ திரைப்படம் 1000 கோடி வசூலை எட்டும் - முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் லியோ.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருவதோடு த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.


ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இந்நிலையில் நமது பிரபல சேனலுக்கு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில் லியோ படம் குறித்த தனது கருத்துக்களை முன் வைத்தார்.


 குறிப்பாக, "பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் வசூலை லியோ முறியடித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக இருப்பது தான் இலக்காக இருக்குமா? என்ற கேள்விக்கு "அதை எல்லாம் தாண்டி 1000 கோடி வசூலை எட்டுவது தான் இலக்காக இருக்கும். ஆனா இதைச் சொன்னால் உருட்டு, உருட்டுனு Troll பன்றாங்க. இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. 800-850 கோடிக்கு பிஸினஸ் வரும்." என செய்யாறு பாலு பதில் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement