• Jul 24 2025

பிறந்தநாள் அதுவுமா கோவப்படுத்திட்டிங்களே - கடுப்பாகி கத்திய கமல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானத்தில் இருந்து, கடைசியாக  வெளியான 'விக்ரம்' படம் வரை, அனைத்திலிமே ஏதேனும் ஒரு வகையில் ரசிகர்கள் மனதை நீங்கா இடம் பிடித்து கலக்கி வரும் கமல் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார்.

இவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதே போல நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் ஒன்றை அனுப்பி இருந்தார்.அதே போல ஹவுஸ்மேட்ஸும் பாட்டுப்பாடி கவிதை வாசித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தனது பிறந்தநாள் அன்று தான் செய்யும் நற்பணி குறித்தும் ரசிகர்கள் பற்றியும் பேச வந்த நிலையில் ஊடக நண்பர்கள் அவரை பேசவிடாது அரசியல் பற்றி கேள்விகள் கேட்க கடுப்பான கமல் இது பிரஸ் மீட் இல்லை.நான் பேச வந்தது நற்பணி பற்றி என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் நான் அரசியலை பற்றி பேசவரவில்லை. எனது ரசிகர்கள் கேக் வெட்டுவது மட்டுமல்லா நற்பணியையும் செய்து வருகிறார்கள்.இன்று நடந்தது பற்றி நாங்கள் உங்களுக்கு செய்தி அனுப்பி வைக்கிறோம்.என கடும் தொணியில் கூறி இருந்தார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள்  அதுவுமா  நம் தலைவரை  கோவப்படுத்தீட்டிங்களே  எனக் கூறி வருகிறார்கள்.





Advertisement

Advertisement