• Jul 25 2025

ரேவதிக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவரா..? வாய்ப்பை தவறவிட்ட பாடகி...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

விஜயகாந்த், கவுண்டமணி, செந்தில், ராதாரவி, வடிவுக்கரசி, கோவைசரளா ஆகியோர் நடிப்பில் ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியானது "வைதேகி காத்திருந்தாள்"  திரைப்படம். இந்தப் படத்தில் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 


படத்தின் கதை ஒரு பக்கம் இருந்தாலும் படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்தது இளையராஜாவின் இசை தான். அதுவும் போக கவுண்டமணி செந்தில் காமெடிக்கும் குறைவு இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடியது. இரண்டு காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் அமைந்திருக்கும்.


இந்தப் படத்தில் விஜயகாந்திற்கும் ரேவதிக்கும் நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இந்த நிலையில் ரேவதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஒரு பிரபல பாடகியாம். அவர் வேறு யாருமில்லை. பிரபல கிராமிய பின்னனி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியும், பாடகியுமான அனிதா குப்புசாமி தான்.


மேட்டுப்பாளையத்தில் வைதேகி காத்திருந்தாள் படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு பரதம் தெரிந்த நாயகியை தான் தேடிக் கொண்டிருந்தார்கள். அனிதா குப்புசாமிக்கும் பரதம் நன்றாக ஆட தெரியுமாம். அதுவும் முதலில் பார்ப்பதற்கு ரேவதி மாதிரியே இருந்ததால் அனிதா குப்புசாமியின் அப்பாவிடம் கேட்டார்களாம்.


ஆனால் அவரின் அப்பா 'மகளை படத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை' என்று கூறிவிட்டாராம். அனிதாவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்ததால் அவரும் முன்வரவில்லையாம். இதனால் இந்த வாய்ப்பை அவர் இழந்து விட்டார்.


Advertisement

Advertisement