• Jul 26 2025

"எனக்கு இது போதும்"- இறுதி நாளில் விக்ரமனுக்கு கிடைத்த சூப்பர் கிப்ட்- வாவ் வேற லெவல் ட்ரெண்டிங் போல

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது நாளைய தினம் முடிவடைய உள்ளதால் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் டைட்டிலை வெல்லப்போவது யார் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நாளை finale நடைபெற இருப்பதை முன்னிட்டு வீட்டுக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே விக்ரமனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசும் வந்திருக்கிறது.

அவருக்கு டி-ஷர்ட் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 'வாத்தி' என எழுதப்பட்டுள்ளது. பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட இந்த டி-ஷர்ட்டை  பார்த்தவுடன் விக்ரமன் மகிழ்ச்சியடைகிறார். தொடர்ந்து அங்கிருக்கும் ஷிவினிடம்,"எனக்கு இது போதும் ஷிவின்" என புன்னகையுடன் தெரிவிக்கிறார். அதனுடன் அவருக்கு கருப்பு நிறத்திலான சட்டை மற்றும் வேஷ்டியும் வந்துள்ளது.


அதனை அணிந்திருக்கும் விக்ரமன் தனக்காக உடை டிசைன் செய்து அனுப்பிய கலைஞருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், ஒவ்வொரு வாரமும் அனுப்பப்பட்ட அத்தனை உடைகளும் நன்றாக இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இதனிடையே, அந்த டிஷர்ட் ஏன் பிடித்திருக்கிறது? என ஷிவின் கேட்கிறார். அப்போது அவருக்கு பதில் அளிக்கும் விக்ரமன்,"வெளியே இது ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்காம்" என்கிறார். தொடர்ந்து அதனை பத்திரமாக தனது பெட்டியில் வைத்துக்கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement