• Jul 24 2025

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராப்பிற்கு இத்தனை கோடி சம்பளமா?- அப்போ சூப்பர் ஸ்டாருக்கு?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், புஷ்பா பட புகழ் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா,யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது, ஜெயிலர் இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத முடித்துள்ள நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தானில் படப்பிடிப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரித்து வருகிறது.


ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் ஜாக்கி ஷெராப் வெறித்தனமாக லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் படுபயங்கரமான வில்லாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.


இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியும் ஜாக்கி ஷெராப்பும் பல ஆண்டுகளுக்கு முன் 'உத்தர் தக்ஷின்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் .


ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து மேலும் லைக்காவின் தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருக்க உள்ளதாகவும், அப்படத்தின் இயக்குநர் தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement