• Jul 24 2025

ஜெயிலர் பட ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. நெல்சன் கொடுத்த சூப்பர் போஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. 75 சதவிகித சூட்டிங் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, மலையாள நடிகர் வினாயக், யோகிபாபு மற்றும் கேமியோ ரோலில் மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். தற்போது படத்தின் சூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.


படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது


இதேபோல படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதில் வாகனங்கள் கவிழ்ந்துள்ளதாக காணப்படுகிறது. ரஜினிகாந்த்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதாகவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானுக்கு ரஜினிகாந்த் சென்ற வீடியோ வெளியானது .


ரஜினியின் அண்ணாத்த படம் கடந்த ஆண்டில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்நிலையில், ஜெயிலர் படம் ரஜினியின் பெஸ்டாக வெளியாகும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



Advertisement

Advertisement