• Jul 25 2025

10பெண்களுடன் உடலுறவு.. மனைவியை விவாகரத்து செய்த 'ஜெயிலர்' பட நடிகர்.. வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 'திமிரு' என்ற படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகர் விநாயகன். அதுமட்டுமல்லாது தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சமீபகாலமாக இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. அதாவது தொடர்ந்து மீடு சர்ச்சையில் சிக்கி வந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 


அந்தவகையில் விநாயகன் மீது கடந்தாண்டு மாடல் அழகி ஒருவர் மீடூ புகார் தெரிவித்து இருந்தார். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவிகையில் இதுவரை தான் 10 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த பெண்களின் சம்மதத்துடன் தான் அவ்வாறு செய்ததாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் விநாயகன். 


இதன் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த விநாயகன்-பபிதா தம்பதி தற்போது விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது தன்னுடைய மனைவி பபிதாவை விவாகரத்து செய்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் விநாயகன் அறிவித்துள்ளார்.

மேலும் இத்தோடு தங்களுக்கிடையேயான திருமண பந்தம் முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement