• Jul 24 2025

ஜனனி டைஃமுக்கு ஏற்ற மாதிரி ஜால்ரா அடிக்கிறா- செம கடுப்பான விக்ரமன்- வாயைப் பிளந்து கேட்ட ஏடிகே

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ்  சீசன் 6 ரியாலிட்டி ஷோ தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியிலிருந்து சாந்தி மாஸ்டர், ஜி.பி முத்து, அசல் ,ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.அத்தோடு அடுத்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

மேலும் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான மாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் தமக்குள்ளே அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் அசீம் ஹவுஸ்மேட் அனைவருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.


இந்த நிலையில் விக்ரமன் ஏடிகேயிடம் புதிய விடயம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதாவது இந்த வீட்டில ஜனனி நேரத்திற்கு ஏற்ற மாதிரி ஜால்ரா அடிக்கிறா நேற்று அமுதவாணன் ராபேட் மாஸ்டர் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஆயிஷா உடம்பு சரியில்லாத போனதை நடிச்சுக் காட்டினாள்.

அப்பிறமா காமெரா எல்லாம் தன்னைத் தான் பார்க்குது என்று தெரிந்தவுடன் ஆயிஷாவுக்கு போய் அட்வைஸ்ட் பண்ற மாதிரி பேசிட்டு இருக்கிறா என்ன ஒரு பொண்ணு என்று விக்ரமனிடம் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement