• Jul 23 2025

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் ஸ்டைலாக கலந்து கொண்ட ஜனனி- வாவ்.... செம கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலி பாலா, பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


லைகாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த பிரபலங்களின் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சி மற்றும் லைவ் செய்யப்பட்டது. மற்றபடி ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் வரும் ஏப்ரல் 14ம் தேதி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இவ் இசை வெளியீட்டு விழாவில் பிக்பாஸ் சீசன் 6 பிரபலமான ஜனனியும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement