• Jul 25 2025

சதித் திட்டத்தை முறியடிக்கப் போராடும் ஜனனி... குணசேகரன் கேட்ட அதிரடிக் கேள்வி... பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் விசாலாட்சி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


அதில் அப்பத்தாவின் ரூமில் நுழைந்த குணசேகரன் அனுப்பிய அந்த நபர் அப்பத்தாவையே பார்த்தபடி நிற்கின்றார். அந்த சமயத்தில் உள்ளே வந்த ஜனனி "என்ன பண்ணிட்டு இருக்கீங்க' என அவரிடம் கேட்கின்றார். அதுமட்டுமல்லாது ரேணுகா அங்கிருந்த நேர்ஸிடம் "உங்களை தானே பத்திரமாய் பார்க்க சொல்லிப் போயிருக்கு" எனக் கேட்கின்றார். அதற்கு நேர்ஸ் "குணசேகரன் சேர் பார்க்க சொன்ன என்று சொன்னாரு அதுதான்" எனப் பதிலளிக்கின்றார்.


மறுபுறம் மண்டபத்தில் அனைவரும் வந்து உட்காருகின்றனர். அந்த சமயத்தில் குணசேகரன் "எங்க ரேணுகாவை காணல" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி, ஈஸ்வரி, விசாலாட்சி ஆகியோர் பதில் சொல்ல முடியாமல் முழிக்கின்றனர்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement