• Jul 23 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு அடித்த ஜாக்பாட்- அடடே அதுக்குள்ள இவ்வளவு பெரிய வாய்ப்பா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 90நாட்களைக் கடந்தும் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஜனனி.இலங்கையைச் சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபல்யமாகியுள்ளார்.

அதேபோல் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனியை ஆதரிக்க தொடங்கினர். ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே அமுது அமுது என சுற்றுக்கொண்டு இருந்தது சலிப்படைய செய்தது. 


இதனாலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்வமாக இருந்த இவர் தற்பொழுது பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனால் ஜனனிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜனனி விரைவில் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement