• Jul 26 2025

அப்பத்தா விஷயத்தில் யாருக்கும் தெரியாமல் புதுத் திட்டம் தீட்டிய ஜனனி... திடீரென ரூமிற்குள் நுழைந்த குணசேகரன்... விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது. அதில் ஜனனி "ஜான்சிராணி குடும்பம் தான் வினையாய் இருப்பாங்க என்று நினைத்தது தப்பாக போய்டிச்சு, அருண் இங்க தான் இருக்கான், கிடைச்சதும் அவனை உண்டு இல்லை னு ஷோ காட்டினத்துக்கு கரிகாலன் கை உடைந்தது தான் மிச்சம்,


இவங்கள எல்லாம் ஆதிரை கல்யாண விஷயத்தில் டைவர்ட் பண்ணியாச்சு, அப்பத்தாவை கண்டுக்க மாட்டாங்க என்று குணசேகரன் நினைத்திருக்கலாம், ஆனால் என்னோட திட்டம் என்ன என்று அவருக்குத் தெரியாதல்ல" என மனதிற்குள் எண்ணுகின்றார்.


ஆனால் ஒரு கட்டத்தில் அப்பத்தா ரூமிற்குள் ஜனனி நிற்கும் போது அங்கு குணசேகரனும் வந்து விடுகின்றார். அதனைப் பார்த்ததும் ஜனனி முழிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப் போகிறது..? ஜனனியின் திட்டம் பலிக்குமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement