• Jul 24 2025

பிரபல இசையமைப்பாளரின் ஆல்பம் பாடல் கமிட்டாகியுள்ள ஜனனி- அவரே வெளியிட்ட போட்டோ- அடடே இவர் சூப்பர் பாடகராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை இலங்கையில் இருந்து கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாத அளவுக்கு இவருக்கு படவாய்ப்புக்கள் குவிந்து கொண்டு வருகின்றன.இதனால் மிகவும்  கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜனனி தன்னுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஜு.வி பிரகாஷின் இசையில் ஓர் ஆல்பம் பாடல் பண்ணியிருக்கிறார்.இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement