• Jul 24 2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்- குழுமிய ரசிகர் கூட்டம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.இவர் நடிப்பில் இறுதியாக  சர்வைவல் என்னும் த்ரில்லர் படம் வெளியாகியது.இயக்குநர்  மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த இப்படத்தில் சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜான்வி கபூர், தனது அடுத்த திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  அதுமட்டுமின்றி, அவர் வருண் தவானுடன் இணைந்து பவால் என்ற  படத்திலும் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில் ஜான்வி கபூர்,  நியான் பச்சை நிற தாவணி அணிந்து கொண்டு திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார்.விஐபி தரிசனம் மூலம்  ஜான்வி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தார். கோயிலுக்குச் சென்ற பிறகு, ரங்கநாயகுலா  மண்டபத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

 ஜான்வி கபூர், தனது அம்மாவான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் & நினைவு நாளையொட்டி புகழ்பெற்ற திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement