• Jul 24 2025

தன் அழகின் ரகசியத்தை வெளிப்படையாக கூறிய ஜான்வி கபூர்... அடடே இதனால தான் 'பளபள'ன்னு இருக்காங்களா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் இந்தி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் தனது அழகின் ரகசியம் பற்றி வெளிப்படையாக கூறி உள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "முகம் பொலிவாக மின்ன ஒரே ஒரு டிப்ஸ் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். முகத்தை நன்றாக தண்ணீரால் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து விடவேண்டும். அதன் பிறகு ஆவி பிடிக்க வேண்டும். 


பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் தேனை ஊற்றி பிசைந்து வைத்த வாழைப்பழத்தில் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடவேண்டும். இது சருமத்திற்கு ஈரத்தன்மையுடன் போஷாக்கையும் கொடுக்கும். 


பின்பு பாதி அறுத்த ஆரஞ்சு பழத்தில் விதைகளை நீக்கி முகத்தின் மீது சிறிது நேரம் தேய்க்க வேண்டும் அதன் பிறகு சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இது டெட் ஸ்கின்னை நீக்கிவிடும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். முகத்தில் பொலிவு வந்து விடும். நீங்களும் முயற்சி செய்யுங்கள்'' என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement