• Jul 24 2025

விரைவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஜெயம் ரவியின் 32 ஆவது திரைப்படம்...அந்த நடிகைக்கு வலை வீசும் படக்குழு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி தனது அண்ணனின் உதவியால் சினிமாவிற்குள் நுழைந்தாலும் இவரது விடாமுயற்சியால் இப்பொழுது வரை வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கிறார். அத்துடன் ஒரு சில படங்கள் டல்லாக அமைந்தாலும் அடுத்த ஒரு படத்தில் கமிட் ஆகி அதை வெற்றி படமாக கொடுக்கும் ஒரு லக் இவரிடம் இருக்கிறது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் கடந்த வருடம் பொன்னின் செல்வன் என்ற பிரம்மாண்டப் படத்தில் அருள் மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து எல்லார் மனதிலும் நச்சுனு ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதைத் தொடர்ந்து அகிலன் படம் ரிலீஸ் ஆனது. 


ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த மாதம் கடைசியில் வெளிவர இருக்கிறது. இந்த படம் இவரை கண்டிப்பாக தூக்கி விடும்.இதை வைத்து அடுத்தடுத்த சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்அடுத்ததாக இவருடைய முப்பதாவது படத்திற்கு தற்காலிகமாக JR30 என்று வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை எடுத்த எம் ராஜேஷ் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஜெயம் ரவி இப்பொழுது பொன்னின் செல்வன் படத்தில் பிசியாக இருப்பதால் அந்த படம் வெளியான பிறகு இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் அனைத்தும் வெளிவரும்.

அடுத்ததாக ஜெயம் ரவி சைரன் படத்தில் கமிட் ஆகிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். மேலும் இப்படம் இந்த வருட இறுதியில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இவரின் 32 வது படமான படத்துக்கு சமீபத்தில் பெயர் வைக்கப்பட்டு உறுதி செய்திருக்கிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இவர் நடிக்கும் புது படத்திற்கு ஜெனி என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறது. அத்துடன் இப்படத்தை இயக்குவது புது இயக்குநராக அறிமுகமாகும் புவனேஷ் அர்ஜுனன். 

மேலும் இப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்கு தெலுங்கு நடிகையான கீர்த்தி செட்டி அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஜெயம் ரவியின் கேரியருக்கு மிகப்பெரிய படமாக அமையும். என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement