• Jul 23 2025

கைதி பட கார்த்திக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மிரட்டும் ஜெயம்ரவி- சைரன் படத்தின் Preface வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் இன்றைய தினம் தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.இதனால் இவரக்கு திரையுலகைச் செர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று இவரின் பிறந்தநாள் என்பதால் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜெயம் ரவி  அந்தோணி பாக்யராஜ் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் சைரன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இவர்களுடன் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் சைரன் படத்தின் டீசரை Preface என்கிற பெயரில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement