• Jul 26 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிஞ்சிடுச்சாம் - ஸ்பெஷல் ஷோவில் குஷியாக இருக்கும் ஜீவா மற்றும் கண்ணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பிறகு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அனைவரும் வேலைக்கு போகின்றார்கள் என்பதால் ஜீவா மட்டும் சொந்தமாக சம்பாதிக்க முடியாததால் வீட்டில் ஒதுக்கப்படுவதாகக் கருதியதோடு மூர்த்தியிடம் முதன்முறையாக தனது மனதில் இருக்கும் விடயங்களை கூறியதோடு தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார்.


இதனை அடுத்து கண்ணனை திட்டியதால் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.இவரோடு கண்ணனும் கிளம்பிச் சென்று விடுவார் போல தான் இருக்கின்றது.

இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் ஜீவாவும் கண்ணனும் இணைந்து ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை ஜீவா என்னும் வெங்கட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இது ஒரு புறம் இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்தது தான் நல்லம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனையும் குறிப்பிட்டு கவலையாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement