• Jul 26 2025

முல்லையின் வளைகாப்புக்கு கிளம்பிய ஜீவா மற்றும் மீனா- திடீரென நெஞ்சுவலியால் கதறிய ஜனார்த்தனன்- கண்ணனை ஏத்தி விட்ட ஐஸ்வர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முன்லையில் வளைகாப்புக்காக அனைவரையும் எதிர்பாரத்துக் கொண்டு முல்லையின் அம்மாவும் அத்தாச்சியும் நிற்கின்றனர்.அந்த நேரத்தில் முல்லையுடன் தனம் மூர்த்தி கதிர் ஆகியோர் வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து கண்ணன் ஐஸ்வர்யாவும் வருகின்றனர்.


கண்ணனை பார்த்ததும் மூர்த்தி அங்கிருந்து கிளம்பி விடுகின்றார். அந்த நேரம் ஐஸ்வர்யா பார்த்தியா கண்ணா உனக்கு வேற சேட் வாங்கித் தந்திட்டு அவங்க வேற கலர்ல சேட் எடுத்திருக்கிறாங்க என ஏத்தி விடுகின்றார். இருந்தாலும் கண்ணன் தான் அண்ணன்கள் மாதிரி சேட் போட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றார்.

தொடர்ந்து தனத்தின் அம்மா முல்லையில் அக்கா எனப் பலரும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் தனம் ஜீவாவையும் மீனாவையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். அந்த நேரம் ஜீவாவும் மீனாவும் வீட்டிலிருந்து கிளம்ப ஆயத்தமாகின்றனர். அந்த நேரம் ஜனார்த்தனன் மாரடைப்பு ஏற்பட்டது போல நடிக்கிறார்.


இதனால் பயந்து போன ஜீவாவும் மீனாவும் அவரை ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்க்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement