• Jul 25 2025

ஐஸ்வர்யாவை பார்க்க போகும் ஜீவா- மீனா..அவமானப்படுத்தும் ஜனார்த்தனன்.. இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோரஸ்.பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

 ஐஸ்வர்யாவும் கண்ணனும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லை திட்டி எல்லாத்தையும் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். பிறகு கூலா இருங்க என்று ஐஸ்வர்யா கூறி, தொல்லை தரும் முல்லை அக்கா என்று ஒரு வீடியோ போட்டு விடலாம் என ஐஸ்வர்யா சொல்ல முல்லை கடுப்பாகிறார்.

இதன் பிறகு வெளியே வந்த கண்ணன் அங்கு இருப்பவர்களை கூட ஒரு வீடியோ எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க அதை கதிர் திட்டுகிறார். இதன் பிறகு அவர்களிடம் இருந்து டாக்டர் வருகிறார் என்று கூறி ஓடி விடுகிறார். அதே நேரத்தில் மீனாவும் ஜீவாவும் வீட்டில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு அவர்கள் கடைக் கணக்கை பார்ப்பதை பார்த்து ஜனார்த்தனன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போனில் வீடியோவை பார்த்துக் கொண்டு மீனாவின் அம்மா ஓடிவந்து மீனாவிடம் காட்டுகிறார்.

மேலும் அதில் ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருந்தபடியே பேசிய வீடியோ இருக்க, ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருக்கிறா, போய் பார்க்க வேண்டும் என்று ஜீவாவும், மீனாவும் கூறுகின்றனர். அங்கே எதற்கு போக வேண்டும் அதுதான் வீடியோவில் அந்த பொண்ணு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டே என்று ஜனார்த்தனன் தடுத்து பார்க்க போய்தான் ஆகவேண்டும் என்று மீனாவும் ஜீவாவும் போகின்றனர். அதனால் மீனாவின் அப்பா அவருடைய மனைவியை திட்டுகிறார்.

பிறகு மருத்துவமனைக்கு வரும் மீனா ஜீவா ஐஸ்வர்யாவிடம் நலம் விசாரித்து கொண்டிருக்க ஐஸ்வர்யா என்னுடைய வீடியோ எல்லாம் பாத்தீங்களா? நல்லா இருக்கா என்று கேட்டுக் கொண்டிருக்க, மீனா கடுப்பாகி அந்த போனை உடைச்சு போடணும் என்று  சொல்கிறார். பிறகு தனம் ஜீவாவிடம் நல்லா இருக்க தானே கயல் எப்படி இருக்கா என்று நலம் விசாரிக்கிறார். பின்னர் ஜீவாவும் மீனாவும் கிளம்பி விடுகின்றனர்.

இதனை அடுத்ததாக மீனாவின் சித்தி மருத்துவமனைக்கு வர அதே நேரத்தில் இரவு ஆகிவிட்டது. இங்கே ஒருத்தர் தான் இருக்க வேண்டும் என்று கதிர் கூறியதால் முல்லையும் தனமும் வீட்டிற்கு போக கிளம்புகின்றனர். பிறகு எல்லோரையும் அனுப்பி வைத்து ஐஸ்வர்யாவிடம் வந்து எல்லோரும் வந்து பாத்துட்டு போற மாதிரி இவங்களும் நாலு ஆரஞ்சு பழத்தை வாங்கிட்டு வந்து பார்த்துட்டு கடமைக்கு கிளம்பி போறாங்க என்று ஐஸ்வர்யா சித்தி ஏத்தி விடுகிறார். ஐஸ்வர்யாவும் கோபத்தோடு யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Advertisement

Advertisement