• Jul 25 2025

கயலைப் பிரிய மனமில்லாமல் தவித்த ஜீவா- குடும்பத்தை பிரிக்க அட்வைஸ்ட் கொடுத்த மல்லியைத் திட்டிய முல்லை- அதிர்ச்சியில் தனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவாவும் மீனாவும் கயலை ப்ளே ஸ்கூலில் சேர்ப்பதற்காக கூட்டிக் கொண்டு செல்கின்றனர். அங்கே கயலை சேர்த்தும் ஜீவா கயலை பிரிய மனமில்லாமல் இருக்கு மீனா ஒரு மாதிரியாக ஜீவாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகின்றார். பின்னர் ரோட்டில் முல்லையும் தனதும் நடந்து செல்லும் போது முல்லையில் அக்கா மல்லி வருகின்றார்.


அவர் இருவரிடமும் நலம் விசாரித்து விட்டு மீனாவைப் போய் பார்த்த விஷயத்தையும் கயலை ஸ்கூலில் சேர்த்த விஷயத்தையும் சொல்லுகின்றார். இதனால் அதிர்ச்சியடையும் தனம் ஸ்கூலில் சேர்த்திட்டாங்களா என்று கேட்கிறார். பின்னர் மல்லி முல்லையிடம் நீயும் கதிரைக் கூட்டிக் கொண்டு தனியாகப் போக வேண்டியது தானே என ஐடியா கொடுக்கின்றார்.

தொடர்ந்து ஜீவா ரோட்டில் போகும் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்டமர் ஒருவரைக் கண்டு பேசுகின்றார். அவரிடம் நீங்க கடைக்கு 5ஆயிரம் ரூபா தரணும் அதை அண்ணன் கிட்ட கொடுத்திடுங்க எனச் சொல்ல அவர் நீ ஏன் அப்பா கடை பற்றி பேசுற அதுக்கும் உனக்கும் சம்மந்தமில்லை என மூர்த்தி போன் பண்ணி சொன்னதாக சொல்ல ஜீவா அதிர்ச்சியடைகின்றார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் அப்பாவும் இது தான் சந்தர்ப்பம் என்று ஏற்றி விடுகின்றார்.


தொடர்ந்து கதிர் மூர்த்தி முல்லை எல்லோரும் இருக்கும் போது தனம் பணம் சேர்த்த உண்டியலை எடுத்து வந்து நிறைஞ்சிடுச்சு என்று சொல்ல மூர்த்தி இந்த பணத்தை வங்கியில் போட்டு விடுமாறு கதிரிடம் சொல்கின்றார்.இந்தப் பணம் கயலின் திருமணச் செலவுக்கு என்று சொல்லி மகிழகின்றனர். பின்னர் தனம் யோசிச்சுக் கொண்டிருக்க கதிர் எல்லோரும் சீக்கிரமாகவே ஒன்றாக சேர்ந்திடுவோம் என்று ஆறுதல் படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement