• Jul 25 2025

அப்படியே கமல்ஹாசனைப் போல உரித்து வைத்திருக்கும் நபர்- ஆசையாய் புகைப்படம் எடுத்த விஷால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது அயராத முயற்சியினாலும் சிறந்த படங்களைத் தேர்வு செய்த நடித்ததாலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகனாக மாத்திரம் நடித்து வரும் நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து தனது 234 படத்தை மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.


மேலும் அண்மையில் இவருடைய பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டிருந்தவர்களின் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.


சமீபகாலமாகவே நடிகர்களை போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது துபாய்யை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு விஸ்வரூபன் படத்தில் வரும் கமல் ஹாசன் போலவே இருக்கிறார். அவருடன் நடிகர் விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறதைக் காணலாம்..







Advertisement

Advertisement