• Jul 25 2025

கோயிலுக்குள்ள கேட்க வேண்டியதை மட்டும் கேளுங்க- பத்திரிகையாளர்களிடம் எகிறிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடத்தி வருகிறார். அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் விஜய். மேலும் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகர் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 


குறிப்பாக, "விஜய் மக்கள் இயக்கம் எப்போது அரசியல் கட்சியாக மாறும்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "கோயிலுக்கு உள்ள வச்சுக்கிட்டு கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டீங்க என்றால் நான் பதில் சொல்வேன். கோயிலுக்குள் என்ன கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேளுங்கள். பதில் வரும்" என சந்திரசேகர் கூறினார்.இவரின் இந்த பதில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement