• Jul 24 2025

முக ஜாடையில் சூர்யா போலவும்.. அழகில் ஜோதிகா போலவும் ஜொலிக்கும் மகள் தியா.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகைப் பொறுத்தவரையில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் ஏராளம். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா உட்படப் பலரையும் குறிப்பிட்டு சொல்லலாம். இந்த வரிசையில் இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஜோடி என்றால் அது சூர்யா-ஜோதிகா ஜோடி தான்.


படங்களில் ரீல் ஜோடியாக இணைந்து நடித்து வந்த இவர்கள் இருவரும் காதலித்துப் பின்பு நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஜோடிகளாக இணைந்து கொண்டனர். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 


குடும்பம், குழந்தை எனப் பிசியாக இருந்து வந்த ஜோதிகா சிறிது காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இவ்வாறு சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க வந்து அடுத்தடுத்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய படங்களில் நடித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது சமீபத்தில் தான் SRI என்ற படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்காகவும் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சூர்யா-ஜோதிகாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகின்றன.


அதாவது சமீபத்தில் ஜோதிகா, தியா மற்றும் தேவ் குட்டி நாய்குட்டியுடன் அவர்களது வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் "அப்பா சூர்யாவை விட செம ஸ்மார்ட்டாக தேவ் உள்ளார்" எனவும், "அம்மா ஜோதிகாவை விட தியா அழகாக உள்ளார்" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement