• Jul 23 2025

தமன்னாவை வம்புக்கிழுந்த கே.ராஜன்... ஜெயிலர் முதல் லியோ வரை சீண்டி விட்டார்...வெட்டுக்குத்து வன்முறை இல்லை அடல்ட் படம் பார்க்கலாம் தப்பில்லை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்ற "ராரா சரசுக்கு ராரா" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் அடல்ட்  கண்டன்ட் படம் பற்றி பேச தன்னை ஏன் அழைத்தார்கள் என தயக்கமாக இருந்ததாக கூறினார். ஆனால் ட்ரெய்லர்த்தான் கொஞ்சம் மோசமாக இருந்தது படத்தின் உட்கருத்து எனக்கு பிடித்திருந்தது.


அடல்ட்  படங்கள் பார்ப்பது தப்பில்லை எனவும் அவ்வாறான படங்கள் பார்ப்பதற்கென ஒரு தரப்பினர் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.  ராரா சரசுக்கு ராரா படத்தினை புகழ்ந்து பேசிய இவர் ஜெய்லர் படத்தில் காவலா பாடலுக்கு ஆடிய நடிகை தமன்னா நாகரீகமாகவா ஆடி இருக்கிறார்.


போட்ட பணத்தை வசூல் செய்ய இப்படியான வேலைகள் செய்யவேண்டி இருக்கு எனவும் கூறி  எ அடல்ட் படமான ராரா சரசுக்கு ராரா படத்திற்கு ப்ரோமோஷன் செய்துள்ளார். 


மேலும் தற்போது வருகிற படங்களில் வெட்டு குத்து ,துப்பாக்கி ,கத்தி என வன்முறை காட்ச்சிகள் அதிகம் இருக்கிறது என மறைமுகமாக லியோ குறித்தும் பேசிய அவர் அதை விட இந்த படங்களை பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தெரிந்தோ தெரியாமலோ நடிகர்களை தான் ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள் அந்த பொறுப்பை உணர்ந்தா நடிகர்கள் நடிக்கிறார்கள் எனவும் இந்நிகழ்ச்சியில் கூறினார்.     

Advertisement

Advertisement