• Jul 24 2025

புதிய தொழிலை ஆரம்பித்த காஜல் அகர்வால்.. கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.

மீண்டும் இந்தியன் 2 தொடங்கிய நிலையில், அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிசினஸில் இறங்கி உள்ளார்.

காஜல் அகர்வாலின் புதிய பிசினஸ்: நடிகை காஜல் அகர்வால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த கனவு பிசினஸை தற்போது நனவாக்கிய சந்தோஷத்தில் அந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

காஜல் எனும் கண் மை அழகு சாதன பொருளை விற்பனை செய்யும் பிசினஸை ஆரம்பித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையே சிறப்பு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தி உள்ளார்.

கணவரின் எண்ண ஓட்டத்தில் தான் இந்த அழகு சாதன பிசினஸ் ஐடியாவே ஆரம்பம் ஆனது என்றும் மேலும், தனது வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் என்றுமே துணையாக இருக்கும் மெயின் மேனான கவுதம் கிச்சுலுவுக்கு என் நன்றிகள் என தெரிவித்த காஜல் அகர்வால் அவருக்கு உதட்டில் முத்த மழை பெய்துள்ள போட்டோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது உற்சாகத்தை ஊர் அறிய செய்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தொடை தெரிய கருப்பு நிற மாடர்ன் உடையை அணிந்து கொண்டு செம ஹாட்டாக வந்து அவரது கணவர் கவுதமுக்கு லிப் லாக் கிஸ் அடித்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள நிலையில், காஜல் அகர்வாலின் திவீர ரசிகர்கள் பொறாமை அடைந்து எங்களுக்கு எல்லாம் கிஸ் கிடையாதா? என கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement