• Aug 26 2025

முக்கிய படத்திலிருந்து திடீரென விலகிய கீர்த்தி சுரேஷ்... உடனே ஒப்பந்தமாகிய காஜல் அகர்வால்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் உள் நுழைந்து குறுகிய காலத்திற்குள்ளேயே ஏராளமான ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்து இருக்கின்றார். 


மேலும் இவரின் நடிப்பில் தற்போது இரண்டு மொழிகளிலும் முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கில் நானியின் 'தசரா' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் குறித்து தற்போது ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷ் தனது  திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படங்கள் சிலவற்றை மிஸ் செய்து இருக்கிறார். அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்திலும் முதலில் நடிக்க இருந்தவர் கீர்த்தி சுரேஷ் தான்.


அதாவது இப்படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் வரை சென்றுள்ளது. ஆனால் படத்தை தொடங்க சற்றுத் தாமதமானதால் கீர்த்தி சுரேஷ் உடனே இப்படத்தில் இருந்து விலகி விட்டாராம். இதனால் அவருக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இப்படத்தில் நடித்திருக்கின்றார்.


Advertisement

Advertisement