• Jul 24 2025

இரண்டாம் கல்யாணம் செய்ய இருக்கும் காஜல் பசுபதி..எல்லாம் அவருக்காக தானா...அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் சேனலின் மூலம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் காஜல் பசுபதி.இதனைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு வெளியான டிஸ்யூம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகினார். தொடர்ந்து சூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம்ஸ், கள்வனின் காதலி, இதய திருடன், சிங்கம், கோ, மவுன குரு, கவுரவம், என்னமோ நடக்குது, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், ஆயிரத்தில் இருவர் கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றியும் பிரபல்யமானார்.இவர்  மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது கோரியோகிராஃபரான சாண்டி மாஸ்டரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்துள்ளார்.

மேலும் விவாகரத்திற்குப் பின்னரும் சாண்டி மாஸ்டருடன் நல்ல உறவில் இருந்து வருகின்றார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்படி ஒரு நிலையில் அசீம் குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘உனக்கெல்லாம் ஜெயிக்க வாய்ப்பு இல்ல தம்பி, ஏன்னா நீ எல்லாம் ஜெயிச்சா அது தவறான உதாரணமாக ஆகிடும்டா சைக்கோ முட்டாள் என்று பதிவிட்டு இருக்கிறார். காஜலின் இந்த பதிவிற்கு ஆதரவும் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் உள்ளது.


இதனை ஒரு ஊடகம் ஒன்று இந்த பதிவை செய்தியாக பதிவேற்றி விட்டு “ அசீமை கிழித்து தொங்க விட்ட சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி ” என பதிவேற்றி உள்ளார்கள்.


இதனை பார்த்த காஜல் றைட்டு சரி ...அத விடுங்க..ஏன்யா சாண்டிய எல்லாத்துக்கும் இழுக்கிறீங்க..அவனை ப்ரீயா விடுங்க மான்” என பதிவிட்டுள்ளார்.



இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு...அவர் பதிலளித்துள்ளார்.அதாவது விடவே மாட்டானுங்க போல..இதுக்காகவே வேற கல்யாணம் பண்ணனும் போல என சிரித்துக்கொண்டு ரிப்ளே போட்டுள்ளார்.

அதற்கு ரசிகர் ஒருவர்..“அப்பிடி மட்டும் எந்த முடிவும் எடுத்தரத ஏன் நம்ம மொரட்டு சிங்கிள் gang நிலைமை என்ன ஆவாரது 🚶” என பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறாக காஜலின் காமெடி பேச்சு தற்போது ரசிகர்களிடத்தே திருமணமா என வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement