• Jul 23 2025

காசோலையை மட்டுமல்ல போர்ஷோ கார் ஒன்றையும் அனிரூத்துக்கு வழங்கிய கலாநிதி மாறன்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் வெளியாகி இதுவரை 600 கோடி ரூபாயை  வசூலித்துள்ளது.அத்தோடு இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.

இப்படம் வெற்றி பெற்றதால் நல்ல லாபத்தைப் பெற்றதால் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ காரினை தயாரிப்பாளர் வழங்கியிருந்தார். இதனை அடுத்து நெல்சன் திலீப்குமாருக்கும் புதிய காரினை வழங்கியிருந்தார்.இதனால் அனிரூத்திற்கு ஏதாவது பரிசு வழங்கமாட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.


இந்நிலையில் அனிரூத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் அவருக்கும் ஒரு செக்கை பரிசாக கொடுத்தார். அதுமட்டுமின்றி போர்ஷே, பிஎம்டபிள்யூ கார்களை நிறுத்தி வேண்டிய காரை எடுத்துக்கொள்ள சொன்னார். 

அதனையடுத்து அனிரூத் போர்ஷே காரை தேர்ந்தெடுக்க அவருக்கு அந்த கார் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஒருவழியாக அனிரூத்துக்கும் செக்கையும், காரையும் கொடுத்து கலாநிதி தனது கடமையை முடித்ததாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement