• Jul 25 2025

10 பவுன்சர்களுடன் வந்த கமல் .. ஒத்த ஆளாக வந்து கெத்து காட்டி சென்ற சூப்பர் ஸ்டார்..! நடந்தது இது தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் மூத்த நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல் தான். இவர்கள் இருவருமே தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்கள். அதன்படி ரஜினி ஜெயிலர் படத்திலும், கமல் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினி, கமல் இருவருக்குமே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படங்கள் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஆனால் ரசிகர்களை இவர்கள் இருவரும் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விஷயம் அரங்கேறி உள்ளது.அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரும் வாக்களிக்க வந்திருந்தனர்.

முதலாவதாக கமல் 10 பவுன்சர்களுடன் பாதுகாப்பாக வந்திருந்தார். கமலின் அருகில் கூட ரசிகர்கள் செல்ல முடியாத அளவுக்கு பவுன்சர்கள் பாதுகாப்புடன் வாக்களித்து விட்டு அழைத்துச் சென்றனர். ஆனால் ரஜினி ஒத்த ஆளாக வந்து கெத்து காட்டி சென்றார். ரசிகர்களுக்கு கை கொடுப்பது, வணக்கம் சொல்வது என அவர்கள் இடம் பேசிவிட்டு சென்றார்.

சினிமாவில் நடிகர்கள் உச்சத்தில் இருக்க காரணம் ரசிகர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் கமல் பவுன்சர்களுடன் வந்துள்ளது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்து உள்ளது. சில நேரங்களில் ரசிகர்கள் தங்கள் நாயகனை பார்க்க வேண்டும் என்பதற்காக கூட்ட நெரிசலில் சிக்குவதும் உண்டு.

இதனால் தான் ரசிகர்களை சந்திப்பதை சில நடிகர்கள் விரும்புவது இல்லை. பல இடங்களில் ரசிகர்கள் அத்துமீறி நடிகர், நடிகைகளின் போட்டோ எடுக்கவும் முயற்சி செய்வதுண்டு. ஆகையால் படத்தைப் பார்த்து மகிழ்வது விட்டு அதன் பிறகு அவர்களுடைய வேலையை ரசிகர்கள் செய்ய வேண்டும் என்பது தான் நடிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Advertisement

Advertisement