• Jul 24 2025

தன்னை இளமையாய் மாற்றிய பிட்னஸ் ட்ரைனருக்கு கமல் கொடுத்த சூப்பர் பரிசு-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் தனது உடற்தகுதி பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை பரிசாக வழங்கியுள்ள விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது. 400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்ததோடு நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி புத்தம் புதிய சாதனையும் படைத்தது. பிரபல நடிகர்களின் படங்கள் 100 நாட்கள் தொட்டது நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில்  விக்ரம் படத்தை ரசிகர்கள் தற்போதும்  கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய நடிகர்கள்  முக்கிய ரோலில் நடித்த இதில் கிளைமாக்ஸ் சீனில் ரோலக்ஸ் ரோலில் சூர்யா தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

மேலும்  போதை பொருள் கும்பலை ஒடுக்கும் இந்த கதைக்களம் கமலஹாசனின் முந்தைய விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதாகும். எனினும் இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் கமல். அதற்காகஅமெரிக்க சென்று உருமாற்றம் செய்ததோடு தனது உடலையும் வெகுவாக மாற்றி பிட்னஸ்க்கு திரும்பி உள்ளார் கமலஹாசன்.



சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளது. அத்தோடு முன்னதாக 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து காரணமாக தள்ளிப்போனது. இதன் பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஆன பிரச்சனையும் காரணாமாக படம் நீண்ட காலம் ஒத்தி வைக்கப்பட்டது.

னினும் தற்போது ஒரு வழியாக பிரச்சினை அனைத்தும் ஓய்ந்து படத்திற்கு தன்னுடன் சேர்த்து மூன்று துணை இயக்குநர்களையும் களம் இறக்கியுள்ளார் ஷங்கர்.

சங்கர் இயக்க காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.மேலும்  இவர் கல் படத்திற்கு தயாராகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகிறது.



இந்நிலையில் தனது பிட்னஸுக்கு உதவியாக இருந்த ஃபிட்னஸ் ட்ரைனருக்கு ரொனால்டோ காரை பரிசாக வழங்கியுள்ளார் உலகநாயகன். முலமு் அதுகுறித்தான புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது.  அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாக பிட்டாக இருக்கிறார் கமலஹாசன்.





Advertisement

Advertisement