• Sep 09 2025

பிக்பாஸில் களமிறங்குகிறாரா அப்பாஸ்..? போன் பண்ணி அழைத்த கமல்ஹாசன்... தீயாய் பரவும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவெ்வான்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷாவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். 


இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தொகுத்து வழங்குவதால் என்னவோ இந்த நிகழ்ச்சிக்கென்று தனி மவுஸ் காணப்படுகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றது. 

இதனையடுத்து விரைவில் 7ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த சீசனில் எந்தப் பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். 


இந்நிலையில் பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்து வந்த அப்பாஸ் தற்போது சென்னைக்கு திரும்பி பல பேட்டிகளைக் கொடுத்து வருகின்றார். அதில் அப்பாஸ் கூறிய ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. 


அதாவது தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருமாறு கூறி கமல்ஹாசன் போன் செய்து அழைத்ததாகவும், ஆனால் அது தனக்கு செட் ஆகாது எனக் கூறி அப்பாஸ் மறுத்துவிட்டதாகவும் அப்பேட்டியில் அவரே தெரிவித்திருக்கின்றார். 

Advertisement

Advertisement