• Jul 25 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விடைபெற முடிவெடுத்த கமல்ஹாசன்- ஆண்டவரின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த நிகழ்ச்சியினை தென்னிந்திய மொழிகளில் முக்கிய நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழில் கமல்ஹாசனும் தெலுங்கில் நாகர்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது டல்லடித்து வருவதாக ஒரு தகவல் வருகின்றது. நிகழ்ச்சியின் ரேட்டிங் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றதாம். இதை காதில் வாங்கிய நாகர்ஜுனா அடுத்த சீசனை தொகுத்து வழங்கப்போவது இல்லை என முடிவெடுத்துள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.


நிகழ்ச்சி ஓரளவிற்கு ரேட்டிங்கில் இருக்கும்போதே விடைபெற நாகர்ஜுனா முடிவெடுத்துள்ளாராம். அதைப்போலவே தமிழிலும் நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் ரேட்டிங் குறைந்து வருகின்றதாக தகவல் வருகின்றது. எனவே நாகர்ஜூனாவை போல கமலும் அடுத்த சீசனில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகினாலும் விலகிவிடுவார் என பேசப்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து கமல் தற்போது பல படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகின்றார். இதைத்தவிர அரசியலிலும் கமல் இறங்கியுள்ளார். எனவே அடுத்த சீசனுக்கு கமல் பை பை சொல்லிவிடும் வாய்ப்பு அதிகம் என சிலர் பேசி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement