• Jul 25 2025

கடலின் நடுவே நின்று bigboss Season 7 அப்டேட்டை வெளியிட்ட கமல்ஹாசன்- வெளியாகிய முதல் promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ரியாலிடரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 அண்மையில் தான் முடிவடைந்தது.இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகினார்.இரண்டாம் இடத்தை விக்ரமன் பெற்றார்.

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக ஆட்கள் தேர்வு ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வருகிறது.


 இதில், ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பயில்வான் ரங்கநாதன் ஆகியோரின் பெயர்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது. 

இப்படியான நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.கடந்த சீசனில் ஆரம்பிக்கலாமா என அலப்பறை கொடுத்த கமல்ஹாசன், நிசப்தமான கடலின் நடுவே நின்று கொண்டு பிக்பாஸ் சீசன் விரைவில் என அப்டேட்டை கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement