• Jul 25 2025

திருமணம் வேணாம்.. எனக்கு லிவிங் தான் வேணும்.. பிரபல நடிகையிடம் அடம்பிடித்த கமல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உடைய உலக நாயகன் என்றால் அது நம்ம கமல்ஹாசன் தான். அதுமட்டுமல்லாது காதல் மன்னன் என்ற ஒரு பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. அதிலும் குறிப்பாக 70, 80 களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றார். 


இதனால் அந்தக் காலகட்டத்தில் பல நடிகைளுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். கமல்ஹாசன் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் ஒரு பிளேபாய் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் அந்த காலகட்டத்தில் நடிகை வாணி கணபதி என்பவருடன் காதல் வலையில் விழுந்தார்.


ஆனால் கமல் ஹாசனுக்கு வாணியை திருமணம் செய்ய விருப்பமில்லையாம். அவரைக் காதலித்து அவருடன் லிவிங் டுகெதரில் இருக்கவே ஆசைப்பட்டாராம். அந்த சமயத்தில் பாலசந்தர் இது போன்று இருக்க கூடாது, அப்படி இருந்தால் உன்னுடைய கேரியர் அழிந்துவிடும் என்று கமலிடம் சொல்லி வாணியை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கமல் வாணி கணபதியை 1978-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர்.


இவ்வாறு தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றாமல், வெளிநாட்டில் பின்பற்றும் லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை பின்பற்றியதால் கமல் பல பெண்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement