• Jul 24 2025

என்னது 'லியோ' படத்தில் கமல் ஹாசன் நடிக்கிறாரா..? வெளியாகிய லேட்டஸ் தகவல்.. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'வாரிசு' படத்தினைத் தொடர்ந்து விஜய் தற்போது தனது 67ஆவது படமான 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். இப்படத்தின் உடைய அறிவிப்பு வீடியோ வெளிவந்த நாளில் இருந்து ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிய வண்ணமே இருக்கின்றது. 


இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா நடிக்கின்றார். அத்தோடு சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து நடித்து வருகின்றனர்.

இதில் இயக்குநர் மிஸ்கின் தன்னுடைய காட்சிகள் யாவும் எடுத்து முடித்துவிட்டதாக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு-வில் வருமா என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.


அதுமட்டுமல்லாது கமல் ஹாசன் லியோ படத்தில் நடிக்கிறாரா என்றும் ஒரு கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்தவகையில் லியோ படத்தில் கமல் ஹாசனை நடிக்க வைக்க இதுவரை லோகேஷ் கனகராஜ் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லையாம்.


மேலும் பெரும்பாலும் கமல் இப்படத்தில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது மற்றுமோர் தகவல் லேட்டஸ் ஆக வெளியாகி இருக்கின்றது. அதில் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த முடிவை மாற்றி கமலை நடிக்க வைத்தால் கூட ஆச்சிரியப்பட வேண்டாம் என்று கூறப்படுகிறது. எனவே கமல் நடிக்கிறாரா இல்லையா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement