• Jul 25 2025

பிரபல நடிகைகளுடன் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன்! யார் யாருடன் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும்,கமல் படப்பிடிப்பில் தீவரமாக ஈடுபட்டு வருகிறார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இப்பொது ஆந்திராவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையே பயணம் செய்து வருகிறார். 



இந்நிலையில், அவர் தனது பயண நேரத்தை மிச்சப்படுத்த ‘இந்தியன் 2’ செட்டை அடைய தனி ஹெலிகாப்டரை எடுத்து சென்று வருகிறார். 

இந்த நிலையில், 1980களின் பிரபல கதாநாயகிகளான ஷோபனா, ஜெய்ஸ்ரீ மற்றும் கமல்ஹாசனின் அண்ணன் மகள் சுஹாசினி ஆகியோருடன் சென்னையில் நடந்த ஒரு சிறப்புக் காட்சியில்  பதான் படத்தை பார்த்திருக்கிறார்.

அந்தவகையில் இதனை, பழம்பெரும் நடிகை ஜெய்ஸ்ரீ நடிகர் கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட்டதன் மகிழ்ச்சி குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



அதில், கமல்ஹாசனின் கடைசிப் படமான ‘விக்ரம்’ வெற்றியடைந்ததற்காக ஜெய்ஸ்ரீ பாராட்டினார். மேலும், 10 வருடங்களை நிறைவு செய்த ‘விஸ்வரூபம்’ போன்ற தரமான படங்களை வழங்கியதற்காக கமல்காசனுக்கு ஓரு சிறப்புக் குறிப்பையும் வழங்கியுள்ளார்.



Advertisement

Advertisement