• Jul 25 2025

மணிரத்னத்துடன் இணைந்து PS2 படத்தை பார்த்த கமல் ! வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில்,கடந்த 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி 4 நாட்களில் 200 கோடிகளை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாகமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்தப் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனத்துடன் மேற்கொண்டுள்ளார் மணிரத்னம். அவரது கனவு பிராஜெக்ட்டான இந்தப் படத்தின் இரு பாகங்களின் சூட்டிங்கையும் 155 நாட்களில் எடுத்து முடித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்று பிரபல இயக்குநர் ராஜமௌலியும் பாராட்டு தெரிவித்திருந்தார். இவ்வளவு கேரக்டர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை சரியாக லிங்க் செய்திருந்தார் மணிரத்னம். இது இந்தப் படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு படக்குழுவினர் மிகவும் அதிகமான பிரமோஷன்களை செய்திருந்தனர். பிரமோஷனல் டூரையும் சென்னை, கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், தொடர்ந்து படத்திற்கும் இந்த டூர் சிறப்பான பிரமோஷனை கொடுத்தது. இந்த டூரில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

இந்தப் படத்தின் துவக்கத்தில் வரலாற்றை அறிமுகப்படுத்தும்வகையில் நடிகர் கமல்ஹாசன் வாய்ஸ்ஓவர் கொடுத்திருந்தார். படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இவர் கொடுத்திருந்த இந்த வாய்ஸ் ஓவர், படத்திற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இந்தப் படத்தை படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement