• Jul 25 2025

மிஷ்கின் பாடலை ரசித்த படி ராதிகா மீது கை போட்டு நடனமாடிய கமல்ஹாசன்- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பவர் 7ம் திகதி தனது 68 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்குபல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வந்தனர். 

 இந்நிலையில் கமல்ஹாசன் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் விதமாக பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில், பல முக்கிய பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மதுவுடன் களைகட்டிய இந்த பார்ட்டியில். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக... இயக்குநர் மிஷ்கின், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'நாயகன்' படத்தில் இடம்பெற்ற 'தென்பாண்டி சீமையிலே'.. என துவங்கும் பாடலை கமல் முன் பாடியுள்ளார். இந்த பாடலை தன்னுடைய தோழி ராதிகா மீது கை போட்டபடி கமல்ஹாசன் ரசித்தார். 

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடி முடித்த பின்னர், கமல் மிஷ்கினை அணைத்தபடி தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நடிகர் கமலின் இந்த வீடியோ சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement