• Jul 25 2025

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்- அடடே இந்த நடிகரா?- எஸ்கே 21 படம் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்தப் படம் வரும் 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 2ம் தேதி சென்னையின் பிரபல கல்லூரியில் நடந்து முடிந்துள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட சிவகார்த்திகேயன், கடந்த முறை வெற்றி மிஸ்ஸாகிவிட்டதாகவும் இந்த முறை கண்டிப்பாக மிஸ்ஸாகாது என்றும் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் தன்னுடைய மெரினா படத்தின் இசை வெளியீடு, மெரினா கடற்கரையில் நடந்ததை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன், அதில் 50 பேர் தான் கலந்துக் கொண்டதாகவும், தற்போது மாவீரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து தான் நெகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


 இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் தனது எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கில் இணைந்தார் . ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பான இந்தப் படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் ஜோடியாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

 படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கிவருகிறார்.. இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது பிசியாக நடித்துவரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்விற்காக சென்னை வந்திருந்தார். மேலும் நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் உடனடியாக மீண்டும் காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.


விஸ்வரூபம் படத்தில் கமலின் வில்லனாக நடித்த ராகுல் போஸ் என்பவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் இரண்டு மாதங்கள் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement