• Jul 26 2025

"கமல் சார் இத தான் சொல்லுவாரு".- நடக்க போவதை முன்பே கணித்த அசீம்- எப்படி தான் இவரால மட்டும் முடியுதோ தெரில

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் குயின்சி வெளியேறியிருந்தார். இவரைத் தொடர்ந்து இந்த வாரம் ராம் மற்றும் ஏடிகே ஆகியோர் வெளியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது.  அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுத்தும் வருகின்றார்கள்.


கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் நடிப்பும் அதிக கவனம் ஈர்த்திருந்தது. முந்தைய வாரங்களில் உள்ளது போல இந்த வாரம் அதிக சண்டை மற்றும் சச்சரவுகள் இல்லாமல் வேடிக்கை நிறைந்து ஜாலியான எபிசோடுகளாக தான் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கிறது. பெரிய அளவில் எந்த போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை போடவும் இல்லை.


அப்படி இருக்கையில், இந்த வார இறுதியில் கமல்ஹாசன் என்ன சொல்வார் என்பதே முன் கூட்டியே கணித்து அசீம் சொன்ன விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதாவது சக போட்டியாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் அசீம், தனது சிவாஜி கணேசன் கதாபாத்திர குரலிலேயே, "கமல் சார் சொல்லுவாரு பாருங்க. இந்த வாரம் ரொம்ப போரா இருந்துச்சு. ஒண்ணுமே இல்ல அப்படின்னு" என தெரிவிக்கிறார். 


Advertisement

Advertisement