• Jul 26 2025

கமலின் அடுத்த படம் டிராப் ஆனது? இயக்குநருக்கு காத்திருந்த ஷாக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் கமல்ஹாசனின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வண்ணமே உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.மேலும்  இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.420 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் கமலின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அத்தோடு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்ததாக துணிவு பட இயக்குநர் எச்.வினோத் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். எனினும் இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.

இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரும் கமலுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளனர். இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கமல் செம்ம பிசி என்பது தான் தற்போதைய நிலவரம். இவ்வாறுஇருக்கையில், மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்துக்கு முன்னரே இந்த கூட்டணி குறித்து அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. இது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமென்றும் இப்படத்திற்கு கமல் திரைக்கதை அமைக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த படத்துக்காக இயக்குநர் மகேஷ் நாராயணன் 2 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement