• Jul 26 2025

‛காஞ்சனா 3' பட நடிகைக்கு மீண்டும் ஏற்பட்ட நோய்…ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

‛காஞ்சனா 3' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நிக்கி தம்போலி. அதன்பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பில்லை.

இதன் பின்னர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். எனினும் தற்போது ஹிந்தியில் ஓரிரு படங்களில் நடிக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கடந்தாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட இவர் இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளார். இந்த முறை பாதிப்பு அதிகம் என்கிறார்.

நிக்கி தம்போலி இதை பற்றி கூறுகையில்,

‛‛கடும் பாதிப்புடன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது.என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்தி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் சிகிச்சை பெறுகிறேன்.

சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து மாஸ்க் அணியுங்கள், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement