• Jul 23 2025

என் தங்கைக்கு நடந்த கொடுமை... எனக்கு ரோட்டுக்கே போக பயம்.. கண்ணீர் விட்டு அழுத கங்கனா ரணாவத்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி வாய்ந்த பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது 'சந்திரமுகி' படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் 17 வயது பள்ளி மாணவியை டெல்லி உள்ள துவாரகா என்னும் இடத்தில் மர்ம நபர் ஆசிட் வீசி தப்பி சென்ற செய்தி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


வித சம்பவம் குறித்து பல நட்சத்திரங்கள் கடுமையான கண்டத்தை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தன் தங்கைக்கு நடந்ததை போன்றே தற்போது இந்த மாணவிக்கும் நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "21 வயதில் என் தங்கை ரங்கோலி சந்தேல் ரோட்டில் நடந்து செல்லும் போது மர்ம நபர் ஆசிட் வீசிசென்றதால் முகம் முழுக்க பாதிப்பானது. 52 சர்ஜரிகள் செய்தும் கண் மட்டும் அதிகமாக பாதிப்பானது. என் கண் முன்னாலே இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்போதில் இருந்து இன்றுவரை எனக்கு ரோட்டில் நடக்க பயமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது கார், பைக் என வெளியில் சென்றால் கூட முகத்தை மூடிக்கொண்டு தான் போவேன் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் கங்கனா ராணவத்.

Advertisement

Advertisement