• Jul 25 2025

பாரதிக்கு ஷாக் கொடுக்க உள்ள கண்ணம்மா- சௌந்தர்யாவிடம் அகிலன் கூறிய குட்நியூஸ்- கணேசன் போட்ட புது பிளான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா, அஞ்சலி, கணபதி ஆகியோர் கோவிலில் இருக்க அப்போது லெட்டர் ஒன்றுடன் அகிலன் வருகிறார். பாரதிக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய யூனிவர்சிட்டியில் ஹார்ட் சர்ஜனாக வேலை கிடைத்திருப்பதாக சொல்கிறார். 

அது மட்டுமல்லாமல் அதை யுனிவர்சிட்டியில் எந்த பணமும் கட்டாமல் உயர் படிப்பை படிக்கலாம். ஆனால் ஒரு வாரத்திற்குள் அங்கே செல்ல வேண்டும் இப்போ என்ன செய்வது என யோசிக்கிறார்.


பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை சந்தித்து இந்த விஷயத்தை சொல்கிறார். அடுத்ததாக கணேசன் அகிலனிடம் கண்ணம்மா தன்னை சந்தித்ததாகவும் அப்போது நான் ஒரு ஐடியா சொல்லிருக்கேன் எனவும் திட்டத்தை கூறுகிறார்.

அதன் பிறகு இருவரும் சென்று பாரதியிடம் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது கண்ணம்மா என்பவர் தான் உன்னுடைய மனைவி என அவரது காதல் கதையை சொல்கின்றனர். பிறகு பாரதிக்கு கண்ணம்மா போன் செய்து என்ன மறந்துட்டீங்களா என சொல்ல இல்ல எனக்கு ஆக்சிடென்ட் ஆகி எல்லாவற்றையும் மறந்துட்டேன் என சொல்கிறார்.


பிறகு கண்ணம்மா நாளைக்கு உங்களுக்கு பிறந்தநாள் உங்கள் சந்திக்க தேவிபட்டினம் பீச்சுக்கு வரேன் நீங்களும் வந்துருங்க. உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் என சொல்கிறார். இதனால் பாரதி கண்ணம்மா என்ன விஷயம் சொல்லப் போகிறார் என மிகவும் சந்தோஷமாக ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement