• Jul 25 2025

அம்மாவிற்காக புது வீட்டை உடைத்துக் கட்டிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகியவர் தான் ப்ரியா பிரின்ஸ். இதனைத் தொடர்ந்து இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்கினார். பின்னர் பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்து பிரபல்யமானார்.

கடைசியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கண்ணான கண்ணே என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் மாப்பிள்ளை, என் பெயர் மீனாட்சி, EMI-தவணை முறை வாழ்க்கை, பொன்மகள் வந்தாள், கண்மணி மற்றும் கடைசியாக கண்ணான கண்ணே என தொடர்ந்து சீரியல்கள் நடித்தார்.


மேலும்  பசங்க 2, 2.0, நடுவன் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டன் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிருந்தார்.

பிரியா பிரின்ஸ் சமீபத்தில் புதிதாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தார், தனது வீட்டில் பார் செட்டப் படங்களில் வருவது போலவே இருந்தது. இந்த தகவலை தனது யூடியூபில் வெளியிட்டுள்ளார்.


சமையலறை திறந்த வெளியாக இல்லை என்பதால் இடித்து மீண்டும் திறந்தவெளி சமையலறையாக கட்டியுள்ளார். அம்மாவின் சந்தோசம் மட்டும் பார்க்கிறோம் அடுப்பறையில் படும் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காகவே சமையலறையை மாற்றி காட்டினேன் என்றும் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement