• Jul 25 2025

கார்த்தி,ஜெயம் ரவி,விக்ரம் இவர்களை வர்ணிக்கிற அளவு கேவலமாகிட்டேனே- கடுப்பில் புலம்பும் பார்த்திபன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியிருக்கின்றது. முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களை பூர்த்தி செய்ததா இல்லையா என இனிமேல் தான் தெரியும்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு சென்று படத்தின் ப்ரமோஷனை நடத்தினார்கள்.போன இடங்களிலெல்லாம் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. புரோமோஷனையும் தாண்டி அவர்களுக்கான தனிப்பட்ட செலவுகள் தான் அதிகமாக இருந்திருக்கும். அதிலும் குறிப்பாக விக்ரம் விதவிதமான ஆடைகளில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.


இதை பற்றிய ஒரு ப்ரமோஷனில் பேசிய பார்த்திபன் ‘சில பேரு ஸ்டைல் பண்ணாலே மயிரு மாதிரி இருக்குனு சொல்வார்கள், ஆனால் விக்ரம் ஒரு மயிறை வைச்சுக்கிட்டு இந்தளவு ஸ்டைல் பண்ண முடியுமா என யோசிக்க வைத்து விட்டார். தங்களால் முடிந்த ஒரு ஸ்டைலை தங்கலான் படத்தின் மூலம் செஞ்சிருக்கீங்க , உங்களுக்கு வாழ்த்துக்கள்,மேலும் ஜெயம் ரவியும் கார்த்தியும் வரும்போதே கையசைத்துக் கொண்டு வருவதை பார்க்கும் போது அவ்ளோ சிறப்பாக இருக்கின்றது.


இவர்களை வருணிக்கக் கூடிய அளவிற்கு கேவலமா ஆயிட்டேனே என நினைக்கும் போது எனக்கு வருத்தம் தான், அவர்கள் நடந்து வருவதை வர்ணிக்க அந்த மூன்று பெண்கள் இருக்கிறார்கள், இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷனை விட இவர்கள் பண்ண ஸ்டைல் அட்டகாசமாக இருந்தது.’ என பார்த்திபன் கூறினார்.


Advertisement

Advertisement